Tsc 38. காதல்… _ தீபஷ்வினி

0
334

காதல்…

“ஏய் சுபா என்னடி இவ்ளோ சீக்கிரம் கிளம்பிட்டே என்ன விஷயம்…?” என்று கேட்ட மாலினி. “ஒஹ் ஓகே ஓகே இன்னைக்கு சிவா கிட்ட லவ் சொல்ல போறேல்ல. சாயங்காலம் ஹாஸ்டல் வந்ததும். அவர் என்ன சொன்னார்ன்னு என்கிட்ட சொல்லு…” என்றுவிட்டு மாலினி சென்றுவிட்டாள்…

சாயங்காலம் ஹாஸ்டல் அறையில் டைரியில் ஏதோ கிறுக்கி கொண்டிருந்தாள் சுபா… தோழியை பின்னால் இருந்து கட்டி கொண்ட மாலினி “என்னடி சக்ஸஸ் தானே, சிவா லவ் ஏத்துகிட்டாகல்ல…?” என்று ஒருவித ஆர்வத்துடன் கேட்டாள் மாலினி…

“ஆமா லவ் ஏத்துகிட்டாங்கடி அவங்களும் விரும்பம் தானாம். எப்படி சொல்றதுன்னு தான் இவ்வளவு நாள் தயங்கிட்டே இருந்தாராம். நாளைக்கு சாயங்காலம் மெரினா பீச்ல மீட் பண்றதா சொன்னாங்க…”

“ஹேய் தேங்க்ஸ்டி சுபா, சிவா என்ன சொல்ல போறாரோன்னு நானும் பயந்துட்டே இருந்தேன். நீ அவரோட பிரெண்ட். அதான் உன் கிட்ட உதவி கேட்டேன். நாளைக்கு சாயங்காலம் சீக்கிரமே நான் மெரினா பீச்க்கு போறேன் என்னோட சிவாவை பார்க்க…” என்று காதல் பொங்க கூறிய மாலினி… தன் காதல் கை கூடிய சந்தோஷத்தில் உறங்கிவிட…

சிவாவின் மேல் இருந்த தன்னுடைய காதல் ஒருதலை காதலாகவே முடிந்து விட்டதை நினைத்து தூக்கம் வராமல் தவித்தாள் சுபா….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here