Tsc 40. தாய்மை _ உமையாள் ஆதி

0
72

“அம்மா பசிக்குதும்மா…” மாத கடைசி என்பதால் இருந்த கைப்பிடி அரிசியும் நேற்றோடு தீர்ந்திருந்தது… அருகில் இருந்த கோவிலில் மணியோசை கேட்க பிரகாசமான அத்தாயின் முகம், “ரோஜா இங்கே இருடா அம்மா கோவில்ல பிரசாதம் வாங்கிட்டு வரேன்…” என்ற படி நான்கு வயது மகளை வீட்டின் உள்ளே வைத்து பூட்டி விட்டு அவசரமாய் கோவிலுக்குச் சென்றார்…

வெள்ளிக்கிழமை கூட்டம் அலைமோத பாத்திரத்தில் கடைசியாய் இருந்த சிறிது உணவே கிடைக்க, கிடைத்ததை பத்திரப்படுத்தினாள் அந்த ஏழைத் தாய்…

அருகில் திடீரென ஏதோ சத்தம் கேட்க, கிழிந்த உடை அணிந்திருந்த நான்கு வயது சிறுவனை பிடித்து இழுத்து சென்று கோவிலுக்கு வெளியே தள்ளினார் கோவில் பொறுப்பை கவனிப்பார்…

“கோவிலுக்குள்ள வரக்கூடாதுன்னு எத்தனை முறை சொன்னாலும் இந்த பிச்சைகார பய கேக்குறது இல்ல… இன்னொரு முறை உள்ள வந்த அவ்ளோ தான்…” என மிரட்டி விட்டு செல்ல கை சிராய்ப்புடனும் அழுத விழிகளோடும் பசிக்கும் வயிற்றை பிடித்த படியும் அச்சிறுவன் பிரசாதம் சாப்பிடும் அனைவரையும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்…

மனம் பதறிய அந்த ஏழைத் தாய், தன் கையில் இருந்த உணவை அச்சிறுவனுக்கு கொடுத்து விட்டு வெறும் கையுடனும் தன் குழந்தை பசியை எப்படி போக்குவது என தன் பசியை மறந்து யோசித்த படியும் வீட்டை நோக்கி நடக்க அவள் புண்ணியத்திற்கு பரிசாய் கிடைத்தது சாலை ஓரம் இருந்த ஒரு இரண்டாயிரம் ரூபாய் புதிய நோட்டு…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here