Tsc 41. அஞ்சலி _ பாலா சுந்தர்

0
399

அஞ்சலி…
“எனக்கு இந்த ஸ்டார்ஸ் எண்ணணும் கொஞ்சம் சொல்லித்தாங்க.”

“குழந்த, எனக்கு தமிழ் மட்டும் தான் நல்லா தெரியும்டா, அதைப் படிக்கணும்னா நீ அவரிடம் போ” என்று வயதான கிழவரிடம் கை காட்டினார் தமிழனுக்கு அறம் சொல்லிக்கொடுத்தவர்.

அவர் கை காட்டிய இடத்தில் ஐன்ஸ்டீன் இருந்தார். அது ஒரு அழகிய சொர்க்கம்.

அங்கேதான், “யார் சொன்னது முத்தம் காமத்தைச் சேர்ந்தது என்று? மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்…” என்று நட்சத்திரங்களின் வெளிச்சம் கொண்டு புதுக்கவிதை எழுதிக்கொண்டிருந்த நா.முத்துக்குமாரிடம் புதுக்கவிதைகளும், தமிழனுக்கு அறம் சொல்லிக்கொடுத்த வள்ளுவனிடம் தமிழும், விண்ணை அளந்த ஐன்ஸ்டினிடம் விண் ஆராய்ச்சியும் கற்றுக்கொண்டிருந்தார்கள் கும்பகோணத்தில் தீக்கிரையாகிய தொன்னூற்றி நாலு குழந்தைகளும், ஆசிஃபாவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here