Tsc 42. ஒரு நாள் பிரிவு _ சரத் சரவணா

0
340

ஒரு நாள் பிரிவு…

தனக்கு திருமணம் ஆன இந்த ஆறு மாதத்தில் இதுவரை எத்தனை யோ முறை அவளை பாடாய் படுத்தியும் போகாதவள் இன்று போய்விட்டாலே. கண்களில் தன் அனுமதி இன்றி வடிந்த கண்ணீரை துடைத்தபடியே பேருந்தில் பயணமானான் அவன்.

பேருந்தை விட்டு இறங்கியவன் வேகமாக ஓடினான் மாமனார் வீட்டை நோக்கி என்ன ஆச்சர்யம்!!! அவனை எதிர்பார்த்தே இரு கைகளை விரித்து வா என காத்திருந்தாள் அவள்…சுற்றி இருந்த யாரும் அவன் கண்களுக்கு தெரியவில்லை …தன்னவளின் எதிரே மண்டியிட்டான் அவன்…மண்டியிட்டவனை தன் வயிற்றோடு அனைத்தவள்…

என்னங்க இது ஒரு நாள் கூட இருக்க முடியலையா? இன்னும் ஒரு மாசம் இருக்குங்க என சிரித்துக்கொன்டே தன்னவனின் கண்ணீரை துடைத்துவிட்டாள்…

ஒரு மாசமும் நானும் இங்கயே இருந்துருவேன் என கூறியவனை பார்த்து மொத்த குடும்பமும் சிரிக்க …வெட்க்கத்தில் முழித்த தன் முதல் குழந்தையை முந்தானையால் மூடினால் அவள்…

அவன் காதலை அவனுக்கு உனர்த்திய கர்வத்துடன் இதையெல்லாம் வேடிக்கை பார்த்தது “ஆடி”மாதம்…

அன்புடன்-சரத் சரவணா …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here