Tsc 45. ரகசியம் _வத்சலா ராகவன்

0
389

[center]ரகசியம்[/center]

கை, கால்கள் ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டு கிடக்க, வாய் ஒரு பக்கம் கோணிக்கிடக்க, தனது நிலையை எண்ணி கண்ணீர் கண்களில் வழிய மருத்துவமனை படுக்கையில் படுத்துக்கிடந்தான் அவன்.

“இனிமே அவனாலே ஜெனமத்துக்கும் படுக்கையை விட்டு எழுந்துக்க முடியாதே” கண்ணீர் சிந்தினர் அவனது பெற்றோர்…

“பல பொண்ணுங்களை ஏமாத்தி அவங்க வாழ்கையை கெடுத்த அந்த பாவத்துக்குத்தான் இப்படி ஒரு தண்டனை. அனுபவிக்கட்டும்” ஏசினர் மற்றவர்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டே ஒரு ரகசிய புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தான் மருத்துவன் விஸ்வரூபன்…

இவன் பல பெண்களுக்கு செய்த கொடுமைகளை அறிந்து அவனுக்கு ஒத்துக்கொள்ளாத அந்த ஊசியை அவனுக்குள் செலுத்திய ரகசியம் விஸ்வரூபன் மட்டும் அறிந்தது அல்லவா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here