Tsc 47. நடுக்கம் _வத்சலா ராகவன்

0
317

[center]நடுக்கம்[/center]

“அப்பாவுக்கு உடம்புக்கு எதுவும் சுகமில்லையோ?”” நினைக்கும் போதே ஒரு நடுக்கம் பரவியது எனக்குள்ளே.

“இல்லை ஒரு வேளை அம்மா எங்காவது கீழே வழுக்கி விழுந்ததுவிட்டாளோ?” கண் முன்னே அந்த காட்சி வந்து போக மூச்சு விட முடியவில்லை என்னால்.

“அத்தையின் கணவருக்கு உடல் நலமில்லையே அவருக்கு ஏதேனும் ஆகியிருக்குமோ? பகீரென்றது எனக்கு.

“ஒண்ணுமில்லைமா அலாரம் வெக்கும்போது உனக்கு தெரியாம கால் போயிடுச்சு” நான் அவரை நடுக்கத்துடன் கைப்பேசியில் அழைக்க சாதாரணமாக சொன்னார் அப்பா.

இரவு பதினோரு மணிக்கு இரண்டு நொடிகள் ஒலித்து நின்ற அப்பாவின் கைப்பேசி அழைப்பு எனக்குள்ளே இத்தனை நடுக்கங்களை கொடுப்பது என்ன டிசைனோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here