Tsc 48. கோவில்_வத்சலா ராகவன்

0
374

[center]கோவில்[/center]

“இப்போவெல்லாம் காசு இருக்கறவங்கதான் சாமியை கூட நல்லா பார்க்க முடியுது” தோழியிடம் சொல்லிக்கொண்டே நடந்தேன் நான்.

“திருப்பதி போயிட்டு வந்தேனே, சாமியை சரியா பார்க்கறதுக்குள்ளே தள்ளியே விட்டுட்டாங்க .” ஆமோதித்தாள் அவள்.

“அங்கே ரெண்டு செகண்ட் கூட சாமியை பார்க்க முடியாது” அலுத்துக்கொண்டேன் நான்.

“எல்லாம் காசும்மா காசு” புலம்பிக்கொண்டாள் தோழி…

இதையெல்லாம் கேட்டுக்கொண்டே யாருமில்லாமல் தனியே நின்றுக்கொண்டு புன்னகையுடன் குழலூதிக்கொண்டிருந்தான் தெருமுனை கோவில் கண்ணன்.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here