Tsc 49. கர்மா_வத்சலா ராகவன் _ இரண்டாம் பரிசு

0
442

கர்மா

மனைவியின் தலையில் சில முழங்கள் மல்லிகைப்பூவை சூட்டினான் சஞ்சய்.

“அந்த பூக்கார கிழவிக்கு கணக்கே தெரியலை இருபது ரூபாய் ஏமாந்திருச்சு” அவன் குரலிலும், சிரிப்பிலும் அத்தனை பெருமை…

மனைவியை தனது பக்கமாக திருப்பி அவள் முகத்தை ரசித்தவனின் முகம் சட்டென மாறியது.

“உன் ஒரு காதிலே இருந்த ஜிமிக்கி எங்கே காணோம்?” கூவினான் அவன்.

அதே நேரத்தில் தனது காலுக்கு அடியில் கிடந்த அந்த தங்க ஜிமிக்கியை வியப்ப்புடன் கையிலெடுத்து பார்த்தாள் அந்த பூக்கார கிழவி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here