Tsc 5. ராஜ தந்திரம்! _ அர்ச்சனா நித்தியானந்தம்

0
352

“மன்னா… மன்னா… அண்டை நாட்டு மன்னர், நாளை காலை காளிக்கு படைத்துவிட்டு, படைகளைத் திரட்டிக்கொண்டு வந்து நம் மீது போர் தொடுக்க உள்ளாரென, ஒற்றன் செய்தி அனுப்பியுள்ளான்.”

“பயம் வேண்டாம் அமைச்சரே, நமது ஊர் எல்லையில் மத்தியானந்தா என்றொரு சாமியார் உள்ளாரே, அவரை மட்டும் அழைத்து வாருங்கள்.”

“மன்னா?”

“அடேய் அமைச்சா, அந்த சாமியார் காலையில் உதிக்க வேண்டிய சூரியனை மதியம் உதிக்கச் செய்யும் வல்லமை பெற்றதனாலேயே மத்தியானந்தா என்று அழைக்கப்படுகிறார். நாளை மதியம் அந்த அண்டை நாட்டு ஹல்க் ஹோகன் எழுந்து, பல் துலக்கி, பால் பாயாசம் நைவேத்தியம் செய்துவிட்டு, படைகளைத் திரட்டிக்கொண்டு வருவதற்குள் நாம் அவனின் கோட்டையை சுற்றி வளைத்து, அவனை சிறையெடுத்துவிடுவோம்.”

“ஆஹா மன்னா, என்ன ஒரு ராஜ தந்திரம்!!”

  • அர்ச்சனா நித்தியானந்தம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here