Tsc 50. நம்பிக்கை_வத்சலா ராகவன்

0
399

[center]நம்பிக்கை[/center]

வேலைக்காரி வரும் நேரத்தில் எனது கணவரது பர்ஸ், எனது வாட்ச் என எல்லாவற்றையும் கப்போர்டுக்குள் எடுத்து வைத்தேன்

“இந்த காலத்திலே யாரையும் நம்ப முடியலை.’ அவரது கேள்வியான பார்வைக்கு பதில் சொன்னேன் நான்.

சில நிமிடங்களில் .“அக்கா, ரெண்டு நாள் என் செயின் வளையல் எல்லாம் உங்க வீட்டிலே இருக்கட்டும்” என்றபடியே உள்ளே வந்தாள் எங்கள் வீட்டு வேலைக்காரி.

“நான் ஊருக்கு போய்ட்டு வந்து திரும்ப வாங்கிக்கறேன்” என்றாள் அவள்.

எனக்குள்ளே சுருக்கென ஏதோ ஒன்று குத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here