TSC 51. பயம் ஒரு நிமிடம் _ Rajeswari D

0
419

அதிகாலை நேரம் கோவை டூ கன்னியாகுமரி பைபாஸ் சாலையில் வேகமாக வந்து கொண்டு இருந்தது அந்த இன்னோவா கார்.

டிரைவர் தவிர அனைவரும் நல்ல தூக்கத்தில் இருக்க எதிர் வரும் வாகனங்களை எளிதாக வேகமாக கடந்து கொண்டு இருந்தது.

ஒரு திருப்பத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து கடைசி நிமிடம் பிரேக் பிடிக்க முயற்சித்து முடியாமல் இவர்களின்
இன்னோவா மீது மிக வேகமாக மோதியது.

வீல் என்ற சத்தத்தோடு கூச்சலும் சேர்த்து ஒழிக்க வலியோடு கதறலும் காதில் விழ சற்றென கண் விழித்தாள் சாரு…

அமைதியாக வண்டி சென்று கொண்டிருக்க எதிரில் அதே திருப்பம்… சற்று தொலைவில் அதே வாகனம் வந்து கொண்டு இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here