Tsc 54. உபதேசம் _ மோகனா கார்த்திக்

0
436

“உபதேசம்”

தலையை இரு கையால் பிடித்தபடி ஒருவன் அமர்ந்திருக்க, அவனை பார்த்த குரு என்பவன்
“ஏன் மச்சான் இவன் ஒரு மாதிரி இருக்கான்…” என்று தனது சக நண்பனான கணேஷிடம் கேட்டான்

“எனக்கும் தெரியல மச்சி… என்னன்னு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறான்… ” என்றவன், “டேய் அறிவு ஏன்டா இப்படி இருக்க… சொல்லித் தொலையேன்டா…” என கேட்டான் எரிச்சலாக

“நேத்து பார்ல நான் விழுந்து கிடந்தப்போ யாரோ என்னை கூட்டிட்டு போய் வீட்ல விட்டாங்கன்னு சொன்னேன்ல… அது யார் தெரியுமா…? என் அப்பாடா…” என்றான் பயத்தில் எச்சிலை விழுங்கியபடி.

அதைக் கேட்டு கணேஷ் அதிர்ச்சியாக, புதிதாக அவர்களது நண்பர்கள் குழுவில் இணைந்த குருவோ, “அப்பாதானேடா கூட்டிட்டு போனாரு… அதுக்கு ஏன்டா இவன் இப்படி பீல் பண்றான்…” என்று மெல்லிய குரலில் கேட்க, “டேய் அவனோட அப்பா செத்து போய் இரண்டு மாசம் ஆச்சுடா…” என்று அதிர்ச்சி விலகாமல் கணேஷ் கூற, “ஐயோ பேய்…” என்றபடி அதிர்ச்சியில் மயங்கி விழுந்துவிட்டான் குரு.

ஆனால் அறிவழகனோ குற்றவுணர்ச்சியில் இருந்தான். “இந்த குடியால நான் கெட்டு சிரழிஞ்சி, உங்களை எல்லாம் தவிக்க விட்டுட்டு போயிட்டேன்… நீயும் என்னை மாதிரி ஆகிடாதே தம்பி… உன் அம்மா தாங்கமாட்டா…” என நேற்று இரவு அறிவழகனின் தந்தை ஆத்மாவாக வந்து கண்கலங்க கூறியது இப்பொழுது அச்சு பிசகாமல் அவன் காதில் எதிரொளித்ததில், இனி அந்த கருமத்தை கையில் கூட தொடக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டான் அவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here