TSC 56. இது சாதாரணம் அப்பா _ Rajeswari D

0
386

நாங்கள் என்ன கேட்கிறோம் இந்த ஆட்சியாளர்களிடம் குடிப்பதற்கு தண்ணீர் தானே அதற்காக இந்த அரசு என்ன செய்தது… காரசாரமாக ஆளும் கட்சியை தாக்கி பேசி கொண்டு இருந்தான் மாயன்அந்த பொதுக்கூட்டத்தில்…பேசிவிட்டு தனது காரில் ஏறினான்.

வண்டியில் அமரவும் போன் வரவும் சரியாக இருந்தது… ஆளும்கட்சியின் மூத்த அரசியல்வாதி இவனை செல்பேசியில் அழைத்து இருந்தார்.

இது தான் உனக்கு டயம் நீ உன்னோட ஆளுங்கள அழைச்சிட்டு இங்கே வந்து சேர்ந்திடு வரப்போற எலெக்சனுக்கு
உனக்கு சீட் வாங்கி தரேன்.

அது வந்து என தயங்கியவனை பார்த்து… யோசிக்காத நாளைக்கு பிரஸ் மீட்க்கு ஏற்பாடு பண்ணி இருக்கு…தலைமைகிட்ட சொல்லிடறேன்.

அடுத்த நாள் பேப்பரில் எதிர் கட்சியை சேர்ந்த திரு. மாயன் அவர்கள் தங்களது தொண்டர்களோடு ஆளுங்கட்சியில் இணைந்தார். செய்தியை படித்தவனோ செய்தி தாளை பார்த்த படி அரசியலில் இதெல்லாம் சாதாரணம்மப்பா என கூறி பேப்பரை மடித்து வைத்தான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here