Tsc 58. விவாக(ம்)ரத்து.. _ வதனி பிரபு

0
368

விவாக(ம்)ரத்து…

அந்த வளாகத்தை விட்டு வெளியில் வந்தாள் இலக்கியா. ஆழமூச்செடுத்து சுவாசித்துப் பின் மெதுவாய் வெளியிட்டாள் காற்றை. ஏதோ ஒரு பெருஞ்சுமையை இறக்கி வைத்தது போல் ஒரு ஆசுவாசம். திரும்பி நிதானமாக அந்த வளாகத்தைப் பார்த்தாள். குடும்ப நல நீதிமன்றம் என்று எழுதப்பட்டிருந்தது. என்னப்பன் நீலகண்டனின் முன் அக்கினி சாட்சியாக நடந்த விவாகம், நீதிபதியின் முன் இருபக்க வழக்கறிக்ஞர்கள் சாட்சியாக ரத்தானது. சொந்தங்கள் தூற்றினர், பந்தங்கள் புறக்கணித்தனர். ஆனால் என்ன வாழவேண்டும் என்ற நம்பிக்கை இருந்தது. அது போதுமே, தன் கையில் இருந்த சிசுவைப் பார்த்து புன்னகைத்தாள். தன் வாழ்க்கையை அழித்துக் கொண்டு, குழந்தையின் வாழ்க்கையை காப்பாற்றிவிட்டாள். யார் என்ன சொன்னால் என்ன? பாரதி மண்ணின் பெண்ணல்லவா அவள்! “குடி குடியைக் கெடுக்கும் “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here