Tsc 59. நவீன ராமன் _ ராஜலட்சுமி நாராயணசாமி

0
350

தன் கைப்பேசியில் கண் வைத்திருந்தவளின் உயிரும் உதிரமும் உலர்ந்து போய்விட்டிருக்க், அவளை உலுக்கியபடி, அதை பட்டென பிடிங்கிப் பார்த்தவனின் இதயமும் தாளம் தப்பி துடித்தது…

தன் வாழ்வே சூனியமானதாய் தனக்குள்ளே உழன்று கொண்டிருந்தவள், அவன் இருப்பை உணர்ந்து நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, அதில் தெரிந்த வேதனையும், உயிர்ப் பறவையின் துடிப்பையும் கண்டவன் அவளை வாரி அணைத்துக் கொண்டான்…

“எம் மேல எந்த தப்பும் இல்ல… இது… இது… எப்டி… எப்டின்னு தெரில… என்ன நம்புங்க…” என வறண்ட தொண்டையை நனைத்து திக்கித்திணறி சொன்னவளின் வாயை ஒற்றை விரலால் மூடி வேண்டாமென சைகை செய்தவன் அவனின் அணைப்பை மேலும் இருக்கினான்…

“பாரும்மா…, இதுல நீ அழவோ, வெட்கித் தலைகுனியவோ ஒன்னுமே இல்ல… இப்போ எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்துடுச்சு… ஆக்கத்த விட அழிவுக்கு அத பயன்படுத்துறவங்க அதிகம்… நாம சைபர் க்ரைம்ல கம்ப்ளெய்ண்ட் செஞ்சா இந்த வீடியோ இருக்க சோர்ஸ் லாம் தேடி இத ரிமூவ் பண்ணிடுவாங்க… நான் இருக்கேன் டா பாத்துக்கறேன்… ” என்றான்.

சந்தேகமாய் நிமிர்ந்து பார்த்தவளுக்கு ஆறுதல் புன்னகையை கொடுத்தபடி, “இதை செஞ்சவங்க தான் வெட்கித் தலைகுனியனும்… நாம அவமானப்படவோ, விபரீத முடிவெடுக்கவோ எதுவுமில்லை… உலகத்துல இருக்க அத்தனை பெண்களுக்கும் இருக்கது தானே இங்கயும் இருக்கு? நிமிர்ந்து தைரியமா இருடா” என்றவன்…, கோடி ராவணர்களுக்கிடையே… ஆபத்பாந்தவனாய் க்ருஷ்ணனாய் தெரிந்தான்… சந்தேகம் கொள்ள இவன் என்ன ராமனா? அவள் மானம் காக்கும் கண்ணனல்லவா??!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here