Tsc 62. ப்பா.. ப்பா.. ப்பா.. ப்ப்பா _ ஷக்தி

0
345

அன்று கிழமை சனி… பேருக்கேற்ப அந்த நாளிலும் அவனுக்கு அலுவலக தொல்லைகள்… என்னடா வாழ்க்கை என்றெண்ணி அர்த்தம் தேடி தேடலில் தேங்கி நின்றான்…

இடை இடையே அவன் வீட்டில் விட்டு வந்த வண்ணத்து பூச்சயின் வர்ணங்கள் அவனை தட்டி எழுப்பின…

அதில் மூழ்கிவிடுவோம் என்ற பயத்தில், அந்த வர்ண வரங்களை அனுபவிக்க நிறைய தயக்கங்கள் அவனுக்கு…

திடீர்ன்னு ஒரு குறுஞ்செய்தி அவனுக்கு தொலைபேசிக்கு வந்து சேர்ந்தது… ப்பா… ப்பா… பப்பா… ப்ப்பா ப்ப்பா என ரீங்கரிக்கும் ஒரு ஓலி செய்தி அந்த மழலை வண்ணத்து மகளிடம் இருந்து…

தேடலின் அர்த்தம் தெளிந்து வாழ்வை அனுபவிக்க தொடங்கினான்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here