TSC 63. தித்திக்கும் நினைவுகள் _ Rajeswari D

0
404

வகுப்பறை கரும்பலகையில் அன்றைய கணக்கு பாடத்தை நடத்திக்கொண்டு இருந்தார் சாரதா.
பலர் நோட்டில் அதை காபி செய்து கொண்டு இருக்க கடைசி இருக்கையில் இருந்த ஸ்வேதாவின் கவனம் வேறு எதிலோ இருந்தது.

அருகில் இருந்த பாட புத்தகத்தை திறந்தவள் நடுவில் இருந்த பக்கத்தை திருப்பி… சுற்றிலும் ஒரு முறை பார்த்தபடி கையால் அங்கிருந்த புகைப்படத்திற்கு முத்தம் கொடுத்தாள்.

ஸ்வேதா எழுந்து நில்… இப்ப என்ன செஞ்ச அந்த புக்ஸ எடுத்துட்டு இங்கே வா… சத்தமாக சாரதாவின் குரல் ஓங்கி ஒழித்தது…தயங்கியபடி எழுந்தவள் புத்தகத்து எடுத்து செல்ல… புக்ஸை திறந்து பார்த்த சாரதாவோ…

இந்த வாரத்தில் மூன்றாவது தடவை இது இன்னோரு முறை இத மாதிரி நடந்தால்… ப்ரின்சி கிட்ட உன்னை அனுப்பிடுவேன் புரிஞ்சுதா…

ஸாரி மிஸ் இனி இப்படி செய்யமாட்டேன் என்றபடி தனது இருக்கையில் அமர்ந்தாள்… மேல் அலமாரியில் எதையோ தேடிக்கொண்டு இருந்த ஸ்வேதாவின்
கையில் அந்த புத்தகம் கிடைக்க நடுபக்கத்தை திறந்து பார்த்தவள் அந்த புகைபடத்தை பார்க்கவும் முகத்தில் புன்னகை தோன்றி இருந்தது. புகைபடத்தில் புன்னகையோடு இருந்தது அன்றைய நாளில் முன்னனியில் இருந்த பலரது கனவில் வலம் வந்த இளம் கதாநாகனுடையது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here