TSC 64. முதல் மழை (ஜான்சியும் நானும்) _ Rajeswari D

0
475

அந்த பார்க்கில் ஏராளமான குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருக்க…நின்றிருந்த காருக்கு அருகில் குழந்தைகளின் விளையாட்டை ரசித்துக் கொண்டு இருந்தனர் நண்பிகள் இருவர்.

விஞ்ஞானம் வெகு விரைவாய் வளர்ந்திட்ட காலகட்டம் அது. சற்றே அமைதியாக நின்றிருந்த பிஎம்டபில்யூ காரில் இருந்து வயர்லஸ் கத்த ஆரம்பித்தது.

மக்களுக்கு அவசர செய்தி இந்த நூற்றாண்டின் முதல் மழை இன்னும் சில நிமிடத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இதன் துளி உடலில் பட்டால் ஆசிட் பட்டது போல கொப்பளங்கள் தோன்றும் ஆதலால் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.

அடுத்த நொடி இருவரும் காரின் உள்ளே அமர அந்த நிமிடமே அந்த இடத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. சில நிமிடத்தில் அந்த பார்க்கில் மக்கள் கூட்டம் மறைந்து இருந்தனர். பார்த்து கொண்டு இருந்த போதே மழைதுளி விழ எதிரில் வந்து கொண்டிருந்த மனிதனின் கையில் பட…பட்ட நொடி கையில் புகையோடு கருப்பாய் கொப்பளங்கள் தோன்ற…

வீல் என கத்தியபடி… அமில மழை பொழியுது என சத்தமிட்டபடி கண் திறக்க எதிரில்
கையில் வைத்திருந்த டம்ளர் தண்ணீரோடு ஜான்சி…பகல்ல தூங்கறதே தப்பு இதுல கனவு வேற காணறையா…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here