TSC 65. என்ன சொல்ல? – Rajeswari D

0
555

மாலை நான்கு மணி உட்சபட்ச வேகத்தில் தனது வண்டியை செலுத்தி கொண்டிருந்தான் தேவ்.

கோபம் ஆத்திரம் இயலாமை மொத்தமாக போட்டி போட அந்த ஆபீஸின் முன் வண்டியை நிறுத்தியவன் வேகமாக உள் நுழைந்தான்.

ரிசப்ஷனில் இருந்தவனிடம் தனது ஏடிஎம் கார்டை எடுத்து வீசியவன் அதே வேகத்தோடு ஆபீஸின் குறிப்பிட்ட ரூம்பின் உள் நுழைய… போகும் போதே கைகளில் கிடைத்த நீள கம்மியை எடுத்தவன் உள் நுழையவும் எதிர் பட்ட பொருட்களை அடித்து நொருக்க ஆரம்பித்தான்.

ஆத்திரம் தீரும் மட்டும் உடைத்தவன் கோபம் சற்றே குறையவும் தன்னை நிதானபடுத்தி கொண்டவன் வெளியேறி ரிசப்ஷனை நெருங்கி எவ்வளவு ஆச்சு என்றபடி ஸ்வைப்பிங் மிசினில் உடைத்ததற்கான பில்லை செலுத்தி விட்டு புறப்பட்டான்.

அவன் புறப்படவும் ரிஷப்சனில் இருந்தவன் தனது பெண் நண்பியுடம் பேசியது கேட்டது. இப்போது இது நல்ல பிசினஸ் ஆபீஸ் தொடங்கி மூன்று மாதம் தான் ஆகுது. மன அழுத்தத்தை குறைக்க இது நல்ல டிரிட்மெண்ட்ன்னு நிறைய கஷ்டமர் வர்றாங்க எனவும் எதிர் முனையில் இருந்தவளோ மன அழுத்தத்தை குறைக்க உன்னோட மண்டையை உடைக்காமல் பார்த்துக்கோ… என்றபடி சிரிப்பது கேட்டது .

(என்ன ஜான்சி நாமலும் ஆரம்பிக்கலாமா இது மாதிரி ஒரு ஆபீஸ்)

பின் குறிப்பு: கட்டையை தூக்கிட்டு எங்கள தேட கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here