TSC 68. கட்டண தரிசனம் _ Murugesan Laxmi

0
417

“ஏங்க, இவ்வளவு கூட்டம் இருக்கே? நாம, எப்ப சாமி பார்த்து, எப்போ வீடு போவது, கட்டண டிக்கெட் எடுங்க, சீக்கிரம் சாமி பார்க்கலாம்” என மனைவி லட்சுமியின் நச்சரிப்பை தாங்க முடியமால் நெளிய ஆரம்பித்தான் முருகன்.

அன்று மணக்குளவினாயகர் கோவிலில் கூட்டம் நெருக்கி தள்ளியது. இரண்டு , மூன்று வரிசையில் மக்கள் கூட்டம் ரோடு வரை இருந்தது.

மனைவியின் பேச்சை கேட்பதே சிறந்தது என நினைத்த முருகன், கட்டண டிக்கெட் எடுக்க சென்றான். லட்சுமியின் முகத்தில் பெருமிதம்.

டிக்கெட் எடுத்த முருகன், அந்த இலவச தரிசண வரிசையில் சிரமத்தில் இருந்த முதிய தம்பதிகளிடம் டிக்கெட் தந்து, “ஐயா, சிரம படாமால், சாமி பாருங்கள்,” என்று கூறி அனுப்பி விட்டு மனைவி அருகே வந்தான்.

“லட்சுமி, கடவுளை இப்படி வரிசையில், ஒழுங்க நின்னு பார்க்கிறது தான் நல்லது. நம்ம கிட்ட பணம் இருக்குனு, டிக்கெட் எடுத்து போவதை விட வயதானவர்களுக்கு உதவுவது, கடவுளுக்கே உதவுவது போல் ஆகும். அதான் நல்லது பா” என்றான். லட்சுமியின் முகத்தில் இப்போதும் பெருமிதம் தான். ஆனால் இது உள்ளம் நெகிழ்ந்த பெருமிதம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here