Tsc 69. ரோஜா _ அர்ச்சனா நித்தியானந்தம்

0
418

அந்த நந்தவனத்தில், ரோஜாவிற்கு மட்டுமே என்றும் ராஜமரியாதை.

அவளால் தீண்டப்படும் ஒரேயொரு ஜீவன் அதுதான்.

மற்ற மரம், செடி, கொடிகளை அவள் கண்கொண்டும் கண்டதில்லை.

அவளுக்கென ஏகமாய் பூத்துக்குலுங்கி தன் காதலை தினம் தினம் பறைசாற்றியது அந்த ரோஜாச்செடி.

ஓர் நாள் ரோஜாக்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு மாலையாக்கி அவளது புகைப்படத்திற்கு சூட்டப்பட, அன்றுடன் நந்தவனத்திலிருந்த ரோஜாச் செடி பட்டுப்போனது.

  • அர்ச்சனா நித்தியானந்தம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here