Tsc 70. அப்பாவின் ஆறாவது விரல் _ அர்ச்சனா நித்தியானந்தம்

0
331

அப்பாவின் ஆறாவது விரலாய் எந்நேரமும் புகைந்துகொண்டிருக்கும், சிகரெட் துண்டு.

உறங்கும்போதும் சிகரெட் பிடிக்கும் யுக்தியை அவர் அறிந்திருந்தால், நிச்சயம் அணையா தழலாய் அவரது விரல்களின் மத்தியில் ஒன்று இரவெல்லாம் கனன்றுகொண்டிருக்கும்.

அப்பாவோடு கால்பந்து விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

சிகரெட்டின் குட்டித்தீ, ஆறடி உயர என் அப்பாவை மென்று தின்றுவிட்டது.

இன்று அப்பா இல்லாத தனிமையில் நான்… துணையாக அவரோடு விளையாடிய கால்பந்து மட்டும்.

  • அர்ச்சனா நித்தியானந்தம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here