TSC 72. மாற்றம் _ Kavi Ragu

0
429

“என்ன பிரியா ரொம்ப யோசனையா இருக்க” எனக் கேட்டாள் மாதவி.

“வேற என்ன பையன் எப்ப பார்த்தாலும் டி.வி இல்லை போன்னு இப்படி மாறி மாறி பயன்படுத்துறான். படிக்க சொன்னா டியூசன்ல முடிச்சுட்டேனு சொல்றான், எப்படி மாத்தனு தெரியலை ” என்றாள் பிரியா.

” நான் சொல்லவா” என மாதவி கேட்க, ” சொல்லுடி” என்றாள் பிரியா ஆர்வமாக.

” முதல்ல நீ மாறு நீ அதிகமா டிவி, போன் பயன்படுத்துறதை குறை. பையன் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி ஓவியம், கை வினைப் பொருள் செய்றது, சின்ன சின்ன அறிவியல் சோதனை செய்றதுனு அறிமுகப்படுத்து. அவனுக்கு ஒரு யூடியூப் சானல்( Channel) ஏற்படுத்து நிறைய பொது அறிவு விஷயங்களை அதில் அவனை சொல்ல சொல்லு. அதுக்காக நிறைய புத்தகங்கள் படிக்கணும்னு புத்தக உலகத்தை அறிமுகப்படுத்து. புதிர் வினா விடை சுடோகு போன்ற விஷயங்களை அறிமுகப்படுத்து. ” கண்டிப்பா கொஞ்சம் கொஞ்சமா மாற்றம் தெரியும். ” என்று ஆலோசனை கொடுத்தால் மாதவி

தீர்வு கண்ட நிம்மதியில் மாதவி கைப் பிடித்து நன்றியோடு சிரித்தால் பிரியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here