TSC 74. காதலாய் ஒரு கேலி _ Kavi Ragu

0
309

” உன்னைக் கல்யாணம் பண்ணினது தான் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரும் தவறு. பண்ணாம இருந்தா என் கையில் இப்ப ஒரு கோடி இருந்திருக்கும்” என்றார் சிவநேசன் மனைவி மேகலாவிடம்.

” ஏன் பேச மாட்டீங்க, நானும் கல்யாணம் பண்ணலைனா நீங்க சாமியாரா தான் போய் இருக்கணும்” என நொடித்து கொண்டு தனது ஆஸ்தான அடுப்பங்கரை சாம்ராஜ்யத்தில் நுழைந்தார் மேகலா.

மாமனார் மாமியார் பேச்சில் அதிர்ந்த சுஜிதா கணவன் கேசவனைப் பார்க்க அவனோ சிரித்துக் கொண்டான்.

தனிமையில் அதைப் பற்றி கேட்ட மனைவியிடம், ” இளமையில் காதல் சொல் தித்திக்கும் ஆனா முதுமையில் கேலியும் கிண்டலும் தான் காதலை உயிர்ப்போடு வைத்திருக்கும். அதுவும் நம்ம இந்திய கலாசாரத்துல வயதான பிறகு காதல் இப்படித்தான் வெளிப்படுத்தப்படுது”என்றான் கேசவன்

“மேகலா, கால்வலினு இன்னும் என்ன செஞ்சுக்கிட்டு இருக்க அடுப்படியில். அப்புறம் என்னை தைலம் தேய்க்க சொல்லுவ. வா சீக்கிரம்”என சிவநேசன் சப்தமிடும் சத்தம் கேட்க அர்த்தம் பொதிந்த பார்வையுடன் கணவனைக் கண்டு புன்னகைத்தாள் சுஜீதா. !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here