TSC 75. மந்திரப் புன்னகை _ Kavi Ragu

0
410

“ஆரம்பிக்கலாமா” என்றான் ராஜீவ். “ஷ்” என்று சைகை செய்தால் கனிகா, ராஜீவிடம். அவனும் சரி என்பதாக தலை அசைத்தான்.

சைகையில் அலைப்பேசியில் சப்ததத்தை குறைத்து வைக்க சொன்னாள். அதனையும் செய்தான். “எல்லாம் ரெடியா” என வினவினாள் கனிகா மெல்லிய குரலிலில் . “தயாரா இருக்கு” என்றான் ராஜீவ்.

ஒருமுறை கண்ணை மூடி தியானித்து விட்டு பயத்தோடு மெல்ல படுக்கையில் கிடத்தினாள் கனிகா தன் மடியில் இருந்த பிள்ளையை.

தாயாராக வைத்திருந்த மெல்லிய துணியால் போர்த்தி விட்டு கொசு வலையை வைத்து விட்டு பிள்ளை தூங்கிய நிம்மதியை புன்னகையில் பகிர்ந்து கொண்டு தண்ணீர் குடித்துவிட்டு உறங்க முற்பட்டனர் இருவரும்.

பிள்ளை சிணுங்கி பின்பு உரத்த குரலில் அழுகத் தொடங்கியது. பிள்ளையை தூக்கினாள் கனிகா. மெல்லிய வெளிச்சத்தில் தாயை அடையாளம் கண்டு சிரித்தது மழலை.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here