ராஜன் ஆறுமாசாமாக ஆசையை அடக்கமுடியாமல் தவித்து கொண்டு ,தீர்க்கும் வழி தேடி மெதுவாக எழுந்து “மனைவியின் உறக்கம் கலையாமல் மெதுவாக கதவை திறந்து ஹாலை ஓர் நோட்டம் விட்டுவிட்டு பூனை போல் மெதுவாக வெளியே வந்து” கதவை சாத்தினார்.
சத்தம் எழுப்பாமல் மெல்ல நெருங்க நெருங்க “நெஞ்சு தடதடத்தது” செய்ய போகும் செயலை எண்ணி “வெட்கம் வேறு வந்து தொலைத்தது”.
ஆனாலும் ஆசை யாரை விட்டது “மனைவி காருண்யா பேருக்கேற்ற கருணையில்லாதவள்” எனத் திட்டிக் கொண்டே செயலில் இறங்கினார் ராஜன்.
இரவு விடிவிளக்கு வெளிச்சத்தில் “மெல்ல துணி விலக்கி பார்த்தால் நல்லா பளபளப்புடன் பெரிசா அப்படியே கடிச்சு முழுங்கத் தூண்டுச்சு ஜீராவில் ஊறிய குலோப் ஜாமூன்.
50 வயதுகூட ஆகாத ராஜன் சுகர் வந்த இந்த ஆறு மாசமா பொண்டாட்டி கண்டிப்பில் இனிப்பின் மேல் கள்வெறி கொண்டு கள்ளத்தனமாக ருசித்திட பிரிட்ஜ்யைத் திறந்து
எறும்பு ஏறிடாவண்ணம் மேலே மஸ்லின் துணி கொண்டு ஏடு சுற்றி வைத்திருந்த பாத்திரத்தை திறந்து ஆசை தீர விரல் வழி வடிந்த ஜீராவை நாக்கால் சுவைத்து ரசித்து உண்டு தன் இனிப்பு வெறியைத் தீர்த்துக் கொண்டார்.