TSC 79. குழந்தைக்காக _ Nisha

0
368

ப்ரியாவுக்கு கண்ணைக் கரித்துக் கொண்டு வர “ம்ஹூம்ம் இதுக்கே பயந்தா எப்படி,” என்ற அம்மாவின் குரல் கடைசியாக காதில் ஒலித்தது.
குழந்தையின் அழுகுரல் ப்ரியாவின் கவனத்தை திசை திருப்பி “என் குழந்தைக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் ”என மனதை தைரியமூட்டிக் கொண்டு குழந்தையைத் தூங்க வைத்தாள்
ஆனாலும் மனதுக்கு ஒப்பவில்லை“ எப்படி செய்வது?” என பயந்து கொண்டே பாட்டிலை கையில் எடுத்து திறந்து பாத்தாள் பிரியா.
இப்போது ப்ரியாவின் நடு முதுகுத் தண்டின் மேல் பயங்கரமான வலி எடுக்கவும் கண்ணை மூடிக் கொண்டு இதுதான் சரியான தீர்வு இதை தவிர வேறு வழியில்லை என நினைத்து கொண்டு தண்ணீர் எடுத்து கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.
குழந்தைக்கான தாய்பால் மற்றும் பிரசவத்திற்கு பின்பு தன்னுடைய ஆரோக்கியமான உடல் நிலை வேண்டி அம்மாவின் கைப்பக்குவமான பேறுகால பிரசவ லேகியத்தை கண்களை மூடிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள் பிள்ளை பெற்று ஒரு வாரமே ஆன பச்ச உடம்புக்காரி ப்ரியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here