Tsc 86. தீ _Rajeswari D

0
699

எரிந்து கொண்டு இருந்தது அந்த குடிசையை நோக்கி வேகமாக வந்து கொண்டு இருந்தது அந்த தீயணைப்பு வாகனம் .

தீயணைப்பு வாகனம் வரும் சத்தம் கேட்டு நகர்ந்து வழிவிட்டவர்கள் அடுத்து நகர்ந்து நிகழ்வை தனது கைபேசியில் படம் எடுத்து கொண்டு இருந்தனர்.

சற்று தொலைவில் இதையெல்லாம் வேடிக்கை பார்த்த அந்த முதியவருக்கு கண் கலங்கியது .

ஏன் தாத்தா அழறிங்க… காலம் மாறிடுச்சுடா… முன்னாடி எல்லாம் தீ பிடிச்சா அணைக்க முயற்சி பண்ணுவாங்க… இப்போ போட்டோ படம் புடிக்கறாங்க… முன்னல்லாம்…சாமியதான் கல்லுன்னு திரட்டுவோம் இப்படி இருக்கற மனுஷங்கதான் கல்லாகிட்டு வராங்க…

அப்போ எல்லாம் இத்தனை வசதி கிடையாது இந்த ஊர்ல… ஒரு இடத்தில் தீ பிடிச்சா அங்க இருக்கற இயேசு கோவில் மாதா கோவில் மணி அடிப்பாங்க தொடர்ச்சியாக… அடுத்தது அடுத்ததுன்னு ஊர் ஊரா அடிப்பாங்க ஊர் ஜனமே தீ அணைக்க அந்த இடத்திற்கு போயிடுவாங்க… அன்றைக்கு ஒற்றுமை இருந்தது. இப்ப பாரு… விழிநீரை துடைத்தபடி தனது பேரனை அழைத்து கொண்டு சென்றார்.

(மறைகிறதா கொஞ்சம் கொஞ்சமாக மனித நேயம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here