TSC 87. நல்லதை நாமே செய்வோம்! _ Mary Naveena

0
418

மாலை நேரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று திடுமென திரண்ட கார்மேகங்களைக் கடிந்து கொள்ள மனமின்றி பேருந்து வரும் திசை நோக்கி கண்களை சுழற்றிக் கொண்டிருந்தேன்.

எங்கிருந்தோ பறந்து வந்த காக்கை சாலையில் பச்சை விளக்கிற்காய் காத்து நின்ற வாகனங்களுக்கு மத்தியில் அமரக் காரணம் அதன் சோர்வா அல்லது உடல் நலமின்மையா என யானறியேன்…

இரு சக்கர வாகனம் முன் அமர்ந்த காக்கை சற்று நடந்து மூன்று சக்கர வாகனம் முன் நிற்கையில் என் மனம் பதற ஆரம்பித்து “இந்த பக்கம் வந்துடு்… இந்த பக்கம் வந்துடு…’’ என உதட்டுக்குள் முனுமுனுத்துக் கொண்டிருந்தேன் …

சில நொடிகள் கடந்த பின், என்னைத் தாண்டி சென்று அந்த காக்கையை எடுத்து பாதுகாப்பாய் ஓரிடத்தில் வைத்தார் எனக்கு பின்னால் அமர்ந்திருந்த எழுபது வயது மதிக்கத்தக்க முதியவர்.

இறுதியாய் இரு வினாடி என் மீது நிலைத்த அவரது பார்வையின் பொருள் ” அது சாகுற வரை பாத்துட்டே இருப்பியா?” என்பதாய் இருக்கும் என மனம் உறுத்திக் கொண்டிருக்கிறது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here