Tsc 88. பசி அறிந்தவள் _ சோ. சுப்புராஜ் _ 3ம் பரிசு

0
424

அதிகாலையில் எழும்பி கிராமப் புறங்களிலிருந்த தோட்டத்திற்குப் போய் கீரைகளை வாங்கி தலைச் சுமையாய்க் கொண்டு வந்து மார்க்கெட்டில் பரப்பி விற்றுக் கொண்டிருந்தாள் சுப்பம்மாள்.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட அவளுக்கு 70 வயதுக்கும் மேலிருக்கும்.
காலை உணவாக ஒரு டீ மட்டுமே அவளின் வயிற்றுக்குள் இருந்ததால், அவளின் முகமெல்லாம் சோர்வு அப்பிக் கிடந்தது.

எங்கிருந்தோ ஓடிவந்த பசுமாடு ஒன்று கீரைக் குவியலிலிருந்து ஒரு கீரைக்கட்டைக் கவ்வியபடி ஓடமுயன்றது.
அதைப்பார்த்து பதறிய ஒருவர் பசுமாட்டை மறித்து கீரைக்கட்டைப் பறிக்க முயலவும், அவரைத் தடுத்த மூதாடி ”விட்டுடுப்பா; அதோட பசியாவது தீரட்டும்….” என்றாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here