Tsc 89. யாருமே காரணமில்லையா _ சோ. சுப்புராஜ்

0
388

யாருமே காரணமில்லையா

கரும்பை வாங்கிய ஆலை முதலாளியை சதாசிவம் கால் தேய தேய நடையாய் நடந்து போய் பார்த்தும் காசு பெயரவில்லை.
சதாசிவத்திடம் வாங்கிய கரும்பு எப்போதோ சர்க்கரையாகி அதையும் விற்று காசாக்கி இருந்தார் ஆலை முதலாளி.
கரும்பை விளைவிக்கக் கடன் கொடுத்த கூட்டுறவு வங்கியோ நோட்டீஸ் மேல் நோட்டீஸாக அனுப்பியும், சதாசிவம் பணத்தைக் கட்டாததால் ஒருகட்டத்தில் அவரின் வீட்டை கிராமமே வேடிக்கை பார்க்க ஜப்தி செய்தது.
அவமானம் தாங்காமல் அன்றைக்கு இரவே தற்கொலை செய்து கொண்டார் சதாசிவம்.
அவர் சாவதற்கு முன்பு மிகச் சிரத்தையாக எழுதி வைத்திருந்தார் – தன் சாவுக்கு யாரும் காரணமில்லை யென்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here