Tsc 90.கண்கெட்ட பின்பும் _ சோ. சுப்புராஜ்

0
440

இடியும் மின்னலுமாய் பொழிந்து கொண்டிருந்தது பெருமழை.
வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து பெய்யும் மழையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனி.
”வீட்டுக்குள்ள வாடி சனியனே, எத்தனை தடவை பட்டாலும் உனக்குப் புத்தியே வர மாட்டேன்கிறதே….” என்று கோபமாய் அலுத்துக் கொண்டாள் ரஞ்சனியின் அம்மா.
ஆனாலும் மழை நின்ற பின்புதான், சுவர்களைத் தடவியபடி மெதுவாய் எழுந்து வீட்டிற்குள் போனாள் ரஞ்சனி.
முன்பொரு மழை நாளின் மின்னலில் தான் அவள் பார்வையைப் பறி கொடுத்திருந்தாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here