Tsc 91. சபதம் முடித்தவன் _ சில்வியா மேரி

0
435

கிராமத்திற்குள் நுழைந்த சொகுசுக்கார் ஒன்று வாசுவின் வீட்டைநோக்கி வேகவேகமாய்ப் போய்க் கொண்டிருந்தது.
காருக்கு வழிகாட்டிய சிறுவர்களும் காருடன் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
பதினைந்து வருஷங்களுக்கு முன்பு வாசு படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்த நாட்களில் அவனுக்கும் அப்பாவுக்கும் தெருவே வேடிக்கை பார்க்க தினசரி சண்டை நடக்கும்.
அப்படி ஒரு சண்டையின் இறுதியில் தான் ‘ஒருநாள் இல்லைன்னா ஒருநாளைக்குப் ரொம்பப் பெரியாளாகி உன் கண்ணுக்கு முன்னால கார்ல வந்து இறங்குவேன் பாரு…’ என்று சபதம் போட்டு வாசு வீட்டைவிட்டு வெளியேறினான்.
’பயல் சொன்னபடி கார்ல வந்துட்டானே…’ என்று ஊரே ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, காரிலிருந்து வாசுவை பிணமாக இறக்கினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here