Tsc 92. நவீன கல்வி _ சில்வியா மேரி

0
401

செல்ல மகள் சௌந்தர்யாவிற்கு மூன்று வயதாகிறது. கண்டிப்பிற்கும் ஒழுக்கத்திற்கும் பெயர் போன மெட்ரிக்குலேசன் பள்ளி ஒன்றில் கஷ்டப்பட்டு யார் யாரிடமோ சொல்லித் தான் எல்.கே.ஜி வகுப்பில் சேர்த்து விட்டிருந்தோம்.
எங்களின் வீட்டில் நானும் மகளும் மனைவியும் என் அம்மாவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட குடும்பப் போட்டோ ஒன்றிருந்தது. ஒருநாள் பள்ளிக்குப் போய்விட்டு வீட்டிற்கு வந்ததும் குடும்ப போட்டோவிலிருந்து என்னை மட்டும் தனியே கத்தரிக்கத் தொடங்கினாள் சௌந்தர்யா.
ஏனென்று பதறிப் போய் விசாரித்ததும் “பாய்ஸும் கேர்ள்ஸும் சேர்ந்து இருக்கக் கூடாதுன்னு எங்க மிஸ் சொல்லி இருக்காங்க அப்பா….” என்றாள் மழலையில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here