TSC 93. நோயறியாது தாயின் அன்பு _ Mary Naveena

0
359

“நோயறியாது தாயின் அன்பு”

பயோடெக்னாலஜி படித்த அவளுக்கே தன் தாய்க்கு வந்த ‘ஆட்டோ இம்மியூன் டிஸாடர்’ மற்றும் அதனால் அவர் அனுபவிக்கும் வேதனையை புரிந்து கொள்ள சற்று சிரமமாய் தான் இருந்தது.

நோயின் தாக்கம் தீவிரமாகி் ஒரு மாதம் மருத்துவமனை வாசத்திற்குப் பின் வீடு திரும்பிய தாயின் அருகில் அமர்ந்திருந்தாள் அவள்.

சிறிது நேர உரையாடலுக்குப் பின் “நாப்பத்தெட்டு நாள் தொடர்ந்து மாதுளம் பழம் சாப்டா சரியாகிடும்னு ஆஸ்பத்திரில சொன்னாங்க” என்ற தாயை சற்று புரியாத பாவத்துடன் ஏறிட்டாள்.

“என்ன மா சொல்ற?’’ வினவியவளுக்கு தாயின் பதில் ” உனக்கு மாசம் தூரம் ஆகும் போது வயித்து வலி நிறைய இருக்குதுல, அதுக்கு தொடர்ந்து மாதுளம் பழம் சாப்டா சரியாகுமாம்”.

மரணப்படுக்கையிலிருந்து மீண்டு வந்து தன் வயிற்று வலி பற்றி கவலைப்படுகின்ற தாயை பார்க்கையில் இவளுக்கு புரிகிறது ஏன் பெத்த மனம் பித்தென்று!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here