Tsc 95. இமயத்தின் வெற்றி – மஹி அபிநந்தன்

0
158

வெற்றி என்பது வெற்றிப் பெற்றவர்களுக்கும் வெற்றிப் பெறுபவர்களுக்கும் ஒரு மலர்கள் விரிந்த பாதை என்றால் வெற்றிக்கு முயன்றுக் கொண்டு இருபவர்களுக்கும் வெற்றியைத் தேடுபவர்களுக்கும் அது ஒரு இமயத்தின் சிகரம். தொடங்கும் போது பார்த்து வியந்து அதில் பயணிக்க ஆசைக் கொண்டு இலட்சிய கனவுடன் சிகரத்தைத் தொட முன்னேற முன்னேற…வழியில் துவண்டு சக்திக் குறைந்தும் பாதையைக் கடக்கத் துடிப்பவர்களுக்கு அந்த பாதை ரோஜா முட்கள் விரித்தப் பாதை. முன்னேற விருப்பமிருப்பினும் தடைகளை நினைத்து இலட்சிய கனவினைத் தொலைப்பவர்களுக்கு அது ஒரு கருவேல முட்கள் வாய்க்கும் பாதையாகும். இரண்டும் முட்களாலானப் பாதை என்பது பயணிக்கும் போது தெரியவரினும் முன்சொன்னவர்களுக்கு இமையத்தின் வெற்றியோடு ரோஜாவும் பரிசாகக் கிடைக்கப் பெறுவதும் பின்னவர்களுக்கு வெறும் ஆறாத வடு ஏற்படுத்தும் கருவேல முட்கள் வாய்க்கப் பெறுவதும் இயல்பு. துவண்டவர்களுக்கு இமயத்தைப் பரிசளிப்பதில்லை வெற்றியின் இயல்பு…துவள துவள முயன்றவர்களுக்கே அது இமயத்தைப் பரிசளிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here