TSC Sample 2. எங்கே? நீ எங்கே? _ ஜான்சி

0
380

குளிர் பிரதேசத்தில் மனைவி இல்லா ஏகாந்த நிலையை இரசித்தவாறு, ஸ்கார்ஃப் அணிந்து, வசீகரமாய் நின்றுக் கொண்டு இருந்தான் தருண்.

அவன் தனிமையின் இனிமையை கெடுக்கவென்றே இரெண்டு நாட்களாய் அறையெங்கிலும் ஏதோ ஒரு சரிவர காயாத துணியின் துர்நாற்றம் அவனை துரத்தியது.

அத்துணியை தேடி எடுத்து துவைத்துவிடும் கொலைவெறியில் வீடெங்கும் தேடினான் அதுதான் கிட்டவேயில்லை.

துணி துவைக்கும் இயந்திரம், சமையலறை கரித்துணி முதலாக முகர்ந்துப் பார்த்து சோர்ந்துப் போனானே ஒழிய அத்துணியை அவனால் கண்டுப் பிடிக்க இயலவில்லை

அவனுக்கு புரிய வந்த தருணத்திலோ அவன் ஸ்கார்ஃப் அறையின் ஓரத்தில் பரிதாபமாய் விழுந்துக் கிடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here