TSC Sample 3. முக நூல் மொய் _ ஜான்சி

0
355

மூளை:  குறிப்பிட்ட சில பேருக்கு மட்டும் தான் லைக், லவ்,ஹா ஹா இன்ன பிற ரியாக்‌ஷன் போடணும்னு சொல்லி இருந்தும் அறிவுக் கெட்டத்தனமா எதுக்குடா அந்தப் பதிவுக்கு ரியாக்ட் செஞ்ச?

விரல்: 
ரொம்ப நல்ல பதிவைப் பார்த்ததும் … என்னை என்னால கட்டுப் படுத்திக்கவே முடியலை…நான் செஞ்சது தப்புத்தான் மன்னிச்சுக்கோங்க… இனி ஒரு தடவை இது போலொரு தவறை செய்யவே மாட்டேன்.

விரல்: இன்னுமா முறைக்கிறீங்கசரி முறைக்காதீங்க… ஆனால் பாருங்க இதுவரை நாம ரியாக்‌ஷன் கொடுக்காத பதிவர் ஒருத்தர் நமக்கு லைக் போட்ருக்கார் இதுக்கென்ன சொல்ல வர்றீங்க?

மூளை: ஓ அப்படியா? அப்ப இப்பவே உடனடியாக அந்தப் பதிவரோட கணக்குக்குப் போய் ஏதாவதொரு பதிவில லைக் போட்டுட்டு வா…ம்ம் ஒரே ஒரு லைக்கு என்ன நான் என்ன சொல்லறேன்னு புரியுதில்ல?

விரல்: நல்லா புரியுது, நல்லா புரியுது …தான் வாங்கினதை கரெக்டா கணக்கு வச்சுத் திரும்பக் கொடுத்துறணும்னு புரியுது. இது கூடக் கல்யாண வீட்டு மொய் போல முக நூல் மொய்னு புரியுது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here