TSC Sample 4. மழையும் மழை சார்ந்த… _ ஜான்சி

0
371

“நம்மளை விவசாயிகளின் நண்பன் என்று சொல்லுவாங்க மகனே” என்று தன் மகவுக்குப் பெருமையாகப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தவன் சட்டென்று தன் மேல் ஏதோ வீசப்படவும் ஆவெனத் துடித்தான்.

‘இந்த மழை ஏன் தான் வருதோ? மழை காலம் வந்தாலே போதும் எப்ப பாரு பாத்ரூம் டைல்ஸ்ல அசிங்கமா ஊர்ந்துக் கிட்டு …’தன் முப்பது சொச்ச லட்சம் செலவழித்துக் கட்டிய வீட்டின் பாத் ரூமில் உப்பை தூவி கொண்டு இருந்த வீட்டின் எஜமானி புலம்பினாள்.

உயிரை கையில் பிடித்துக் கொண்டு மகனிடம், ” இந்த மனுசனை நம்ப முடியாது மகனே, நீ எப்படியாவது ஓடிப் போய் உயிரை காப்பாத்திக்க” மடிந்து துடித்து உயிரை விட்டான்.

அப்ப மனுசன் நல்லவனா? கெட்டவனா? யோசித்தவாறே காட்டைத் தேடி ஓடினான் மகன்.

மழையும் இல்லாமல், மண்புழுவும் இல்லாமல் கிராமத்தில் விவசாயி தூக்குக் கயிறை உத்திரத்தில் மாட்டிக் கொண்டு இருந்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here