TSC Sample 5. நேர் கொண்ட பார்வை Contests 1. Tiny Story Contest

0
422

நேர்கொண்ட பார்வை

ஏங்க? நான் சொல்லுறது…புரியுதில்ல?

படம் பார்த்த பின்னும் புரியாம இருக்குமா? எல்லாம்புரியுது, இதோ அவளுக்கு சொல்லிடறேன் பொறு, பதறாதே.

“படிக்கிறேன்னு பசப்புற வேலை எல்லாம் வச்சுக்காத…அடுத்த முகூர்த்தத்திலயே உனக்கு கல்யாணம் வச்சிருக்கிறோம் உடனே வரப் பாரு” நகரத்தில் படிக்கும் மகளிடம் பேசியவரின் அலைபேசி இணைப்பு துண்டிக்கப் பட்டது.

பதின் வயது பாவை மிரண்டு நிற்க, கையில் பால் சொம்பு திணிக்கப் பட்டு, “அவர் என்ன சொன்னாலும் கேட்டுக்கணும்…மனம் கோணாம நடக்கணும்” அறைக்குள் தள்ளிவிட்டனர்.

அறைக்குள் வீறிடல் எழும்ப அதைக் கேளாமல் டிவியில் கண்பதித்து இருந்தனர் பெற்றோர். டிவியில் ‘நோ மீன்ஸ் நோ’ சொல்லிக் கொண்டிருந்தார் அஜீத் குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here