Tsc 101. புதிதாய் ஓர் உலகம்! _அர்ச்சனா நித்தியானந்தம்_ முதல் பரிசு

0
365

இந்தக் கடற்கரை மணலில் எனது ஐந்து பிள்ளைகளின் விளையாட்டையும், சிரிப்பையும் கண்டு கரை தீண்ட தயங்குகின்றன அலைகளெல்லாம்.

அன்றும் என் மனைவி மக்களுடன் வந்திருந்த பொழுது, எனது பிள்ளைகளின் சிரிப்பொலி எங்கும் எதிரொலித்தன.

பசி கொண்ட பெருங்கடல், பேரலையை வலையென வீசி, சிக்கியதனைத்தையும் விழுங்கியது, என் மனைவி மக்களையும் சேர்த்து.

கடற்கரை மணலில், மூழ்கிப்போன என் உலகைத் தேடி பித்தனென நான் திரிந்தது போல், தங்களின் உலகம் எங்கே சென்றதென புரியாமல் அழுதிருந்தன, அறியாத பிள்ளைகள் சில.

அதில் ஐவர் என் நிழலில் உயிர் வளர்க்க, புதிதாய் ஒர் உலகம் எங்களுக்காகப் பிறந்தது.

  • அர்ச்சனா நித்தியானந்தம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here