என் ஜீவன் நீயே_18_ஜான்சி

0
75

அத்தியாயம் 18

அடுத்த நாள் ஜீவனும், திவ்யாவும் அவளது வீட்டிற்கு மறுவீடு உபச்சாரத்திற்கு சென்று வந்தனர். ஜீவன் அதற்கடுத்த நாளே தனது அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்தான். திவ்யாவும் அவனோடு இணைந்துக் கொண்டாள்.

அவள் அவனோடு வருவதை முதலில் வினோதமாக பார்த்தான் எனினும் கூட ஒன்றும் சொல்லவில்லை. அப்போது மட்டுமா அடுத்தடுத்த நாட்களிலும் கூட அவன் அமைதியாகவே இருந்தான்.

அடுத்த ஒரு வார காலத்திற்குள்ளாக விருந்தினர்கள்எல்லாம் அவரவர் வீடுகளுக்கு திரும்பி இருக்க,அங்கே அவர்கள் வீட்டில் அவள், ஜீவன், இந்திரா மற்றும் ராஜ் மட்டுமே. அனிக்கா இன்னுமே குழந்தை பிறப்பிற்கு பின்னர் தாய் வீட்டிற்கு சென்றவள் அங்கேயே இருந்ததால் ரூபன் சில நாட்கள் இங்கே இருப்பான் அல்லது தனது வீட்டிற்கு சென்று விடுவான்.

அன்று வார இறுதி, ஜீவன் இன்னும் கூட உறங்கிக் கொண்டு இருந்தான். இந்திரா சமையலறையில் ஏதோ செய்துக் கொண்டு இருக்க, அவரை இவள் தோளோடு கட்டிக் கொண்டாள்.

“நன்றி அத்தை” தான் சொன்னபடி தன்னை மருமகளாக்கியதற்கு நன்றி பகர்ந்துக் கொண்டு இருந்தாள்.தன்னைக் கட்டிக் கொண்டு நன்றி பகிர்கின்றவளிடம் மகிழ்ச்சியாக திரும்பிய இந்திராபுன்னகைத்தார்.

“எதுக்கு நன்றி எல்லாம்? இது உன் வீடு. உன் வீட்டுக்கு நீ வந்திருக்க. இதுக்கெல்லாம் நன்றியா?”

அதன் பின்னர் சற்று அளவளாவலுடன் அவருடன் அவள் வேலையை பகிர்ந்துக் கொண்டாள்.

“ஜீவனுக்கு உடம்புக்கு பரவாயில்லைதானே அத்தை?, அவங்க முன் போல இல்லை. ரொம்ப அமைதியா…” தயங்கியே கேட்டாள்.

“ம்ம்… உடம்புக்கு சரியில்லாததில் இருந்தே அப்படித்தான் இருக்கான், இனி நீ வந்திட்டல்ல சரியாகிருவான்.”

அவருடைய வார்த்தையில் இருந்த நம்பிக்கை இவளது மனதில் இல்லை. தான் செய்தவைகளை மறுபடி மறுபடி மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டாள். அவளுக்கு அந்த சூழ்நிலையில் தான் செய்தவை எல்லாம் சரியாகவே தோன்றி இருந்தன. இப்போதுதான் குழப்பின, ஜாக்குலினிடம் ஒரு சந்தர்ப்பத்தில் தங்களுக்கு இடையே நிகழ்ந்தவைகளை சொன்னாள் எனினும் மேலும் யாருடனும் அதனை பகிர அவளுக்கு தோன்றவில்லை.

சாரித்த”

“எதுக்கு?”

“அதென்னமோ முதலில் உங்க கூட எல்லாம் அதிகம் பழகினது இல்லையா… கொஞ்சம் தப்பா எல்லாம் கூட நினைச்சிருக்கேன்…. எல்லாரை பற்றியும்.”

“சரி அதுக்கென்ன… எல்லாரும் நினைக்கிறதுதான்.”

“நீங்க எல்லாம் கோபமே படமாட்டீங்களா? எப்படி எப்பவும் இவ்வளவு அமைதியா?

“கோபப்பட்டு என்ன பிரயோஜனம்? அமைதியா இருந்துமே அத்தனை மாத்திரை” என தனது மாத்திரை பையை காண்பித்தார்.

“ம்ம்”

“தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் கோபத்தை வளர்க்கக் கூடாது. அப்பப்ப அங்கங்க மறந்துடணும், இல்லை கடந்திடணும்.”

“சூப்பர் அத்தைசனி ஞாயிறு நீங்க ஓய்வெடுத்துக்கோங்க நான் எல்லாமே பார்த்துக்கிறேன். மற்ற நாளும் கூட என்னால முடிஞ்சதை நான் காலையில செய்து தரேன்.

எனக்கொன்னும் இந்த வேலை கஷ்டம் இல்லை திவ்யா. அது போல இப்பவே எல்லா பொறுப்பையும் ஏத்துக்கணும்னு ல்லைமா. ஆஃபீஸ் போற… உனக்கே நாள் முழுக்க வேலை இருக்கே? நீ கொஞ்ச கொஞ்சமா பொறுப்பேத்துக் கிட்டா போதும். பொண்ணுங்களுக்கு புள்ளக் குட்டின்னு வர்றப்பவே தானா பொறுப்பு வந்திரும் என்றவராக தனது வேலையை தொடர்ந்தார்.

அவரது புள்ளக் குட்டி எனும் பேச்சில் அவள் கனவு இன்னுமாக விரிந்திருக்க, அன்று வாயெல்லாம் பல்லாக திரிந்தாள்.காலை உணவு உண்ண வந்த ஜீவனுக்கும் மாமனாருக்கும் அவள்உணவு பறிமாற முனைய,

அவரவர் வேணும்கிறதை எடுத்து சாப்பிட்டுக்கலாம்மா நீ உட்கார்” என்றார் ராஜ்

“சரி மாமா” என்றவளாக அவள் தனக்கு தேவையான அளவு இட்லியை எடுத்துக் கொண்டு தேங்காய் சட்னியை ஊற்றும் முன்பாக ஜீவன் அவள் முன்பாக தக்காளிச் சட்னியை வைத்தான்.

“தேங்க்ஸ் ஜீவா என்றவளாக தனக்கு பிடித்தமான தக்காளி சட்னியோடு உண்ண ஆரம்பித்தாள்.

ஜீவன் தன்னருகே இருந்த மனைவியை ஆராயும் விதமாக பார்த்தான். ‘நிஜமாகவே மகிழ்ச்சியாக இருக்கின்றாளா என்ன?

அவள் நிஜமாகவே மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள், தன்னோடு பேசாத அவனை கூட கண்டுக் கொள்ளாமல் தன் தாய் தகப்பனிடம் சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டிருப்பவளைப் பார்த்து அவனது மனம் முரண்டியது. தங்களது பிரிவிற்கு முந்தைய அவளது பேச்சிற்கும் தற்போதையை செய்கைக்கும் சம்பந்தம் இல்லாதிருக்க வெகுவாககுழம்பினான்.

அவனை தாக்கிய புயல் அவளையும் தாக்கியதையும் அது அவளுள் கொண்டு வந்த மாற்றத்தையும் அவன் அறிந்திருக்கவில்லை அல்லவா?

ஜீவன் ஞாயிறு காலை திருப்பலிக்கு புறப்பட்டுக் கொண்டு இருந்தான். “நானும் சர்ச் வரேன் ஜீவா” என திவ்யாவும் புறப்பட்டாள். ரூபனும், தீபனும் இல்லாத போது அவர்களது அறையை இவர்கள் உபயோகித்துக் கொள்வதுதான். அது போல சேலை அணியவென்று ஆளற்ற அறை ஒன்றுக்குச் சென்று தனது புதியதொரு சேலையை கட்டியவள் வெளியே வந்தாள்.

மருமகள் தான் சொல்லும் முன்பாக தானாகவே புறப்படவும், இந்திரா குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மல்லிகை சரத்தை எடுத்து திவ்யாவிற்கு வைத்து விட்டார். பேசிக் கொண்டு இருந்தவர் அருகிருந்த தன் கணவரிடம்,

“ஜீவன் பொண்டாட்டி ரொம்ப அழகில்ல, நானே கண்ணு வச்சுட்டேன்” என்றவராக உப்பை எடுத்து வந்து அவள் தலையை மூன்று முறை சுற்றி குளியலறையில் ஓடும் தண்ணீரில் போட்டுவிட்டு வந்தார்.

ஜீவனும் வெளியே வந்தவன் அவளை பார்த்தபடியே நின்றிருந்தான். ஆனாலும் கூட கண்டுக் கொள்ளாதது போல முன்னே நடந்தான்.

நால்வருமாக காரில் ஏறிக் கொள்ள, ஆலயம் நோக்கிச் சென்றனர். ஆலயத்தில் திருப்பலி திருவழிபாட்டுக்கு பின்னர் ஜீவனையும் புதுமணப்பெண்ணைக் காண ஆளாளுக்கு வருவதும் கைகுலுக்குவதுமாக அங்கே அவளுக்கு ஏராளமான நட்புக்கள் கிடைத்து விட்டிருந்தன.

“அண்ணி அண்ணி” என வந்த சிறு வாண்டுகளோடு பேசிக் கொண்டு இருந்தாள்.

அனிக்காவும் ஆலயத்திற்கு குழந்தையோடு வந்திருக்க, ஆலயத்தின் வெளியில் குழந்தையை ஆளாளுக்கு கொஞ்சிய வண்ணம் சிறிது நேரம் நின்று, பின்னர் அவரவர் இல்லம் திரும்பினர்.

திவ்யா வீட்டுக்கு திரும்ப வந்ததும் தாயின் அழைப்பு வரவே அன்று காலை முதல் நிகழ்ந்தவைகளில் தனது தனிப்பட்ட விபரங்கள் தவிர்த்து நிகழ்ந்தவைகளை எல்லாம் தாயிடம் ஒப்புவித்தாள். அதன் பின்னர் என்ன? மதிய உணவு வேளை, மதிய தூக்கம், இரவு உணவு தயாரிப்பு, இரவு உணவு வேளை கழிந்து இரவு தூக்கம் என விடுமுறை நாள் கழிந்தது.

வாரா வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் புதுமணத் தம்பதியரை ஒவ்வொரு உறவினரும் விருந்திற்கு அழைக்க அவர்கள் அங்கே செல்வதும், மற்ற நாட்கள் இப்படியே பிரதி எடுத்தாற் போல கழிவதுமாக இருந்தன. திவ்யா ஜீவனிடம் பேசினாலும் கூட அவன் அவளுக்கு ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்து, மற்ற நேரங்களின் அமைதியாக இருந்து என திவ்யாவின் உள்ளே குடி இருந்த டெமோனை தினம் தினம் உசுப்பி விட்டுக் கொண்டு இருந்தான்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here