10. கடி ஜோக்ஸ்

0
682

இன்றைய தாங்கமுடியாத கடிகள் –

ஒருவன் 2 நீச்சல் குளங்களை கட்டினான். ஒரு குளத்தில் தண்ணீர் நிரப்பாமலே விட்டான். ஏன்னு கேட்டதற்கு…
அது நீச்சல் தெரியாதவங்களுக்காகப்பா என்றான்.

மாடு போல சின்னதா இருக்கும்…! ஆனா அது மாடு இல்ல…!

அது என்ன?

தெரியலையா?

அது கண்ணுக் குட்டி!

கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளி படைச்சே?

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம்
என்னன்னு தெரியுமா…?

தெரியலையே… என்னது?

தலையிலே முடி இருக்கிறது தான்…!

செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.

செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது

ஏன்… தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க தெரியுமா…!

கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சிடும்ல…!

டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க…!

சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?

ராத்திரியில சூரியன் எங்கே போகுது?..

எங்கேயும் போகல…, இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை!.

கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு!

டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு!

சோப் டப்பாலே ஏன் சின்ன சின்ன ஓட்டையா போட்டுருக்காங்க?

ஏன்னா, பெரிய ஓட்டை போட்டா சோப் கீழ விழுந்துடும்!

உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?

ஓட்டுவீடு, அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்… ‘தங்க’ வீடெல்லாம் கிடையாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here