6. குட்டிக் கதை

0
407

குட்டி கதை:

படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்…,

அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக்கிட்டு இருக்கு…

அவனுக்கு ஆச்சரியமா இருக்கு…

பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு இருந்தாரு…

அவர்கிட்ட கேட்டான்…

படிச்சவன்:
மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே…?

விவசாயி :
அது பழகின மாடு தம்பி…,
அதுவே சுத்திக்கும்…,

படிச்சவன் :
நீங்க உள்ளே வந்த உடனே
அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க…?

விவசாயி :
அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி…,

சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம் வராது…

அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்…

படிச்சவன் :
அது சுத்தறதை நிறுத்திட்டு.,
ஒரே இடத்துல நின்னு…,
தலைய மட்டும் ஆட்டினா…!
அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க…?

விவசாயி :
இதுக்குத் தான் தம்பி.,

நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம்
படிக்க அனுப்பலை…!

படிச்சவன்: ? ? ? ? ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here