8. பழமொழி vs புதுமொழி

0
1450

பழைய பாட்டை ரீமிக்ஸ் பண்றாங்க,
பழைய படத்த ரீமேக் பண்றாங்க,
அப்புறம் எதுக்கு பழமொழிய மட்டும் அப்படியே விட்டு வைக்கணும்?

அதான் நாங்களும் பழமொழிகளை புதுமொழிகளா மாத்திட்டோம்.
அதையும் இன்னைக்கு கரன்ட் டிரெண்டான செல்போனை வச்சே ரீமிக்ஸ் பண்ணிட்டோம்.
ஏன்னா அப்போ பல் போனாத்தான் சொல் போச்சு, இன்னைக்கு ‘cell’ போனாலே சொல் போச்சு’.

பழசு: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!!

:smiley:

புதுசு: பேலன்ஸ் இருக்கும்போதே பேசிக்கொள்…


பழசு: இளங்கன்று பயமறியாது…!!

:smiley:

புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது…


பழசு: குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்…!!

:smiley:

புதுசு: கொரியன் செட்டு கதறடிக்கும்…


பழசு: தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு

புதுசு: தாயும் பிள்ளையும் என்றாலும் போனும் ப்ளூடூத்தும் வேறு…


பழசு: தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்.!!

புதுசு: பையன் எஸ்.எம்.எஸ் அனுப்பினா, பொண்ணு எம்.எம்.எஸ் அனுப்பும்…


பழசு: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்…!!

புதுசு: செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்…


பழசு: ஆறிலும் சாவு… நூறிலும் சாவு…!!

:smiley:

புதுசு: ஆறு ரூபாய்க்கும் ரீசார்ஜ், நூறு ரூபாய்க்கும் ரீசார்ஜ்…


பழசு: நாய் வாலை நிமிர்த்த முடியாது…!!

:smiley:

புதுசு: நெட்வொர்க்காரனை திருத்த முடியாது…


பழசு: குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு…!

:smiley:

புதுசு: கஸ்டமர்கேர் பேச்சு, கட் பண்ணினா போச்சு…


பழசு: வெட்டு ஒண்ணு… துண்டு ரெண்டு…!!

புதுசு: செல்போன் ஒண்ணு… சிம்மு ரெண்டு…


பழசு: கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது…!!

புதுசு: பேசாம இருந்தா, பேலன்ஸ் குறையாது…


பழசு: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்…!!

புதுசு: வாயற்ற வாழ்வே குறைவற்ற பேலன்ஸ்…


பழசு: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்…!!

புதுசு: வல்லவனுக்கு செல்லும் ஆயுதம்…


பழசு: குரைக்கிற நாய் கடிக்காது!!

புதுசு: கொரியன் போன் உழைக்காது…


பழசு: யானைக்கொரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்

புதுசு: ஆப்பிளுக்கு ஒரு காலம் வந்தா, ஆண்ட்ராய்டுக்கு ஒரு காலம் வரும்…


பழசு: ஆழம் தெரியாமல் காலை விடாதே…!!

புதுசு: கேமரா இல்லாமல் போனை வாங்காதே…


பழசு: கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை…!!

புதுசு: கேமராவுக்கும் ஆசை, குவாலிட்டிக்கும் ஆசை.


பழசு: தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்…!!

புதுசு: போன எடுத்தவன், பொழுதுக்கும் நோண்டாமல் இருக்க மாட்டான்…


பழசு: பேராசை பெருநஷ்டம்…!!

புதுசு: பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here