10. அவர்களும் வாழட்டும் _ கவிதை _ ஜான்சி

0
433

அவர்களும் வாழட்டும்
வெள்ளிக் கிழமைகளில்,

நட்ட நடு ரோட்டில்,

ஆஜானுபாகுவாய் உடல் கொண்ட

மூன்றாம் பாலினர்கள்

வேடிக்கைப் பொருளாய் நடமாடி

வழியெங்கும் வண்டிகளை “மறித்து”,

தங்கள் சுயமரியாதையை

ஏற்கெனெவே “மரித்து”

பலகாலமாய்

பிச்சைக் கேட்கும் அவலம்

யாரும் காணாரோ?

அவர்கள்

உடலுக்கும் உணர்வுகளுக்குமாய் பிறவியிலே

பேதமைத் தந்தது யார் தவறு?

உண்டு வாழ்ந்திட வழிவகுக்காமல்

புறக்கணித்துச் செல்வது யார் தவறு?

படிப்பும் , வேலையும் அளிக்காமல்,

பிச்சை எடுக்க வழிவகுத்தது யார் தவறு?

நேரிய வழியை அவருக்கு காட்டாமல்

ஆதித் தொழிலை வளர்த்திடச் செய்வது யார் தவறு?

எல்லாவற்றிலும் ஆதாயம் தேடும் மனிதா…

உந்தன் அலட்சியம் இத்துணை மட்டும் போதும்.

ஆண்கள் கடத்தல், பாலினம் மாற்றம்,

விபச்சாரத்தின் அரங்கேற்றம்.

அத்தனையும் நின்றே முடியட்டும்.

மூன்றாம் பாலினம் கல்வியும்,

வேலையும் பெற்று

கண்ணியமாக வாழட்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here