11. சுயமரியாதை _ கவிதை _ ஜான்சி

0
438

சுயமரியாதை

பண்பாடற்றப் பேச்சு,
மரியாதையில்லா நடத்தை,

கண்ணியமற்ற வாழ்க்கை,
அன்பில்லாச் செயல்கள்,

பொறுப்பில்லா குணம்,
வெறுப்பு மண்டிய மனம்,

சிடு சிடு வார்த்தைகள்,
உடம்பில் தடம் பதிக்கும் வன்முறைகள்.

இந்நிலையில்,

ஐந்தறிவு மிருகமும் கூட

ஒருவேளைச் சீற்றம் காட்டியிருக்குமோ?!

இவளோ அதற்கும் கீழானாள்,

சமூக நிர்பந்தங்களுக்கு பணிந்த

மனைவியெனும் மங்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here