12. இளமை _ கவிதை _ ஜான்சி

0
408

இளமை

ஆற்றல் பொங்கும் இளமை
ஓர் வரம்.

பற்பல
செயல் புரிய,
ஏற்றதான வாழ்வின்
காலம்

தன்னை செதுக்குவதோ
இல்லை சிதைப்பதோ

பிறருக்கு உதவுவதோ
இல்லை உபத்திரப் படுத்துவதோ

நாட்டைக் காப்பதோ
இல்லை அழிப்பதோ

எல்லாம் இயலும்
இளமையின் ஆற்றலால்…

எனவே, இளைஞர் அனைவருக்கும்

நலனைத் தேடி
நலமே வாழ
நல் வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here