16. ஆத்ம நண்பன் _ கவிதை _ ஜான்சி

0
452

ஆத்ம நண்பன்

சுகத்தை மட்டும்
பகிரும் உலகில்

என் சுமையை
கேட்கும் உண்மை நண்பன்.

என் சிறிய, பெரிய
சுமைகள்
சேர்த்து,
அவன் வலிய தோளில்
சுமக்க கொடுத்தேன்.

ஆணி பதிந்த
உள்ளங்கையில்,
எந்தன் கரத்தைக்
கோர்த்து வைத்தேன்.

சிலுவை சுமந்த
தோளில் சாய்ந்து,
கவலை எதுவும்
அறியாத உணர்வில்
கரத்தை வீசி
நானும் நடந்தேன்.

எந்தன் நண்பன் இயேசு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here