20. சாமார்த்தியம்

0
580

சாமர்த்தியம்

யாரோச் சொல்லிச் சென்றார்கள்
‘இதுவும் கடந்துப் போகும்’ என்று…

பெண் இனம் சிசு முதல் முதுமை வரை வக்கரித்து சூறையாடப் படுவது எப்போது கடந்துப் போகும்?

போராட்டமே வாழ்க்கையாகி விட்ட எம் தமிழ் இனத்தின் சூழல் எப்போது கடந்துப் போகும்?

அழிவுக்கு மேல் அழிவு கொணரும் பணபலம் மிக்க சக்திகள் எப்போது கடந்து, வலுவிழந்துப் போகும்?

தன் மக்களையே நெருக்கடியில் தள்ளும் ஏதேச்சதிகார அரசு எப்போது கடந்துப் போகும்?

ஜாதி எனும் பெயரில் துண்டாடப்படும் தலைகளில் வீற்றிருக்கும் வாள்கள் எப்போது தகர்ந்து, கடந்துப் போகும்?

மதத்தின் பெயரால் நிகழும் பகற்கொள்ளைகள் எப்போது தடைப்பட்டு, கடந்துப் போகும்?

வறியவன் துயர் பாராத சமூகம் என்று திருந்தி, கடந்துப் போகும்?

வருடம் முழுவதும் பயிர்செய்து, நஷ்டத்தை அறுவடை செய்யும் விவசாயியின் துன்ப நிலை எப்போது கடந்துப் போகும்?

வாக்கியம் சொன்னவன் சாமர்த்தியசாலியாய் இருக்க வேண்டும்.

‘இதுவும் கடந்துப் போகும்’ என்றதோடு நின்றுக் கொண்டான்.

எப்போதென காலக்குறிப்பொன்றை சொல்லாதல்லவா விட்டு விட்டான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here